ஸ்ரீமன் வைகுண்ட சுவாமி OR ‘அய்யா’ என்றால் யார்?

ayyadharmapathi

அகிலத்திரட்டு வேதாகமத்தின் படி, ஸ்ரீ மஹாவிஷ்ணு தன்னுடைய பத்தாவது அவதாரமாக கலியுகத்தில் எடுத்த அவதாரமே “வைகுண்ட” அவதாரம் ஆகும். கொல்லம் வருடம் 1008-ம் ஆண்டு மாசி மாதம் 20ம் தேதி (ஆங்கில வருடம் 1833 மார்ச் மாதம் 1-ம் தேதி) ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டமாய்த் தோன்றி பண்டார உருவில் வந்தார்.

தந்தை: மஹாவிஷ்ணு
தாய்: மகாலெட்சுமி

(ஸ்ரீ மஹாவிஷ்ணுவுக்கும், மகாலெட்சுமிக்கும் மகனாக அவதரித்தது போல் காட்டிக் கொண்டு, ஸ்ரீ மஹாவிஷ்ணு தாமே வைகுண்டமாய்த் தோன்றினார். முருக அவதாரம், நரசிம்ம அவதாரம் போன்றே இந்த அவதாரத்திலும் இறைவனுக்கு பூலோக தாய் தந்தையர்கள் இல்லை)

அவதரித்த இடம்: திருச்செந்தூர் கடல்
(ஸ்ரீ வைகுண்டர் திருச்செந்தூர் கடலில் இருந்து அவதரித்து வந்த கடற்கரையில் ‘அவதாரப்பதி’ உள்ளது. இது அய்யா வழி புனிதத் தலங்களுள் ஒன்றாகும்)

அவதரித்த நாள்: கொல்லம் வருடம் 1008-ம் ஆண்டு மாசி மாதம் 20-ம் தேதி (ஆங்கில வருடம் 1833 மார்ச் மாதம் 1-ம் தேதி)

பிற பெயர்கள்: ‘அய்யா’, ‘ஸ்ரீமன் நாராயண சுவாமி’, ‘ஸ்ரீமன் வைகுண்ட சுவாமி’, ‘ஸ்ரீ பண்டாரம்’, ‘சிவ நாராயணர்’, ‘மாயோன்’, ‘திருமால்’, ஸ்ரீ பெருமாள்.

மனைவியர்கள்/ திருக்கல்யாணங்கள்/ தெய்வத் திருமணங்கள்:
ஏழு சப்தகன்னியர்கள், மற்றும் ஏழு தெய்வகன்னியர்கள்
.(தாமே ஏக பரம்பொருள், தன்னையே உலகில் பலவித பெயர்களில் தெய்வமாக வணங்குகின்றனர் என்பதை உணர்த்த வேண்டி இறைவன் செய்த திருக்கல்யாணங்கள்)

ஏழு சப்தகன்னியர்கள்: சாஸ்திரக்கன்னி, கமலக்கன்னி, மோகக்கன்னி, மூலக்கன்னி, கடுங்சக்தி, தெய்வக்கன்னி, அரிமடவை
(முந்தைய பெயர்கள்: மரகதம், வல்லி, வள்ளி, சலிகை, சரகதக் கன்னி, சரிதை, அரிமடவை)

ஏழு தெய்வகன்னியர்கள்: பூமடந்தை, லெட்சுமி
, ஈசுரர் சொரூபம் கரியமால் தானெடுத்து பகவதி, பார்வதியையும், பிரம்மதேவர் சொரூபம் தானெடுத்து அம்மை மண்டைக்காட்டாளையும், கந்தன் சொரூபம் கரியமால் தானெடுத்து வள்ளி, தெய்வானையையும் திருக்கல்யாணம் புரிந்தார்.

சீடர்கள்: திரு. சிவனான்டி, திரு. பண்டாரம், திரு. அழகேசன், திரு. சுப்பையா, திரு. அரிகோபாலன் (முந்தைய பெயர்கள்: பஞ்ச பாண்டவர்கள் எனும் தர்மன், வீமன், அர்சுனன், நகுலன், சகாதேவன்)

ஏவல் சீவாய்மார்கள் (ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் கட்டளையை ஏற்று நடப்பவர்கள்):
கருடராசன், சிமிளராசன், தேர்தகன், துட்டிவீரன், தேர்க்குடையோன்
(முந்தைய பெயர்கள்: சுடலைமாடன், கட்டையேறி, பலவேசம், மாசானம், காத்தவராயன்)
அவதார நிறைவு நாள்: கொல்லம் ஆண்டு 1026 வைகாசி மாதம் 21-ஆம் தேதி (2nd June C.1851) திங்கள் கிழமை, பூருவ பட்சம், பூச நட்ஷத்திரத்தில் பகல் பன்னிரண்டு மணிக்கு தான் எடுத்த கலியுக அவதாரத்தை நிறைவு செய்துக் கொண்டு மீண்டும் வைகுண்டத்திற்கு திரும்பிச் சென்றார்.

ஸ்ரீ வைகுண்டர் தந்த புனித நூல்கள்:
அகிலத்திரட்டு அம்மானை, அருள்நூல்

அகிலத்திரட்டு எனும் புனித நூலை இயற்றியவர்:
திரு. இரா. அரிகோபாலன் சீடர்

அகிலத்திரட்டு எழுதப்பட்ட நாள்: கொல்லம் வருடம் 1016 ஆம் ஆண்டு, கார்த்திகை மாதம் 27-ஆம் தேதி, வெள்ளிக்கிழமை (11th December 1840 CE).இப்புனித வேதம் எழுதப்பட்ட இடமே ‘தாமரைக்குளம்பதி’ என்றழைக்கப்படுகிறது.