Slide 1
அய்யா ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோயில்
Slide 2
சோழம்பேடு திருமுல்லைவாயில் (அம்பத்தூர்) அய்யாவின் 24-ம் ஆண்டு 10 நாள் பால்முறை திரு ஏடு வாசிப்புத் திருவிழா
Slide 2
பால்முறை திரு ஏடு வாசிப்புத் திருவிழா 31-12-2021 முதல் 09-01-2022 நடைபெற உள்ளது.
previous arrowprevious arrow
next arrownext arrow
ayya

அய்யா வழி என்றால் என்ன?

அய்யா வழி” or “நாராயண சுவாமி வழி” என்பது உலகை படைத்துக் காக்கும் ஆண்டவனாகிய ஸ்ரீமன் நாராயணரை குருவாக ஏற்றல் எனப் பாெருள். இக்கலியுகத்தில் ஸ்ரீமன் வைகுண்டராக அவதரித்த உலகளந்த ஆண்டவர் நாராயணரை மக்கள் ‘அய்யா’ என்றும், ‘ஸ்ரீமன் வைகுண்ட சுவாமி’ என்றும், ‘ஸ்ரீமன் நாராயண சுவாமி’ என்றும் அன்போடு அழைத்து வணங்கி வருகின்றனர். யுகம்தோறும் அவதரித்த நாராயணர், இக்கலியுகத்திலும் வைகுண்டமாய்த் தோன்றி தர்மத்தால் கலியை தன்னந்தன்னால் ஈடழித்து தர்ம யுகமாக்கி தாரணியை ஆள கர்ம கலியில் அவதரித்தார்.

வேதங்களிலும், புராணங்களிலும், இதிகாசங்களிலும் கூறியுள்ள படியும், பிற சமயங்களின் கணிப்பின் படியும் கோரமான கலியை ஒழிக்க உலக இரட்சகராய் நாராயணர் அவதரித்தார். சான்றோர்களுக்காக இரங்கி வந்த உலகளந்த ஆண்டவர் நாராயணரின் உபதேசங்களை பின்பற்றும் சத்திய வேதவழியே ‘அய்யா வழி’ என்றழைக்கப்படுகிறது. இதை “ஆண்டவனின் வழி” என்றும், “இறைவன் வழி” என்றும் “வேதத்தின் வழி” என்றும், “தர்மத்தின் வழி” என்றும் அழைப்பர்.

ஸ்ரீமன் நாராயணரின் வைகுண்டவதாரத்தினால் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றோம்! அரசாள ஆணை பெற்றோம்! சமத்துவம், சமூகநீதி, சுயமரியாதை, அச்சமின்மை, தர்மம் வளர்ந்தது!

அய்யா வழி என்றால் என்ன?

ஸ்ரீமன் நாராயண வைகுண்ட சுவாமி’ அல்லது ‘ஸ்ரீ பண்டாரம்’ என்று அழைக்கப்படும் ‘அய்யா வைகுண்ட சுவாமி’ (சி .1833 – சி .1851) மகாவிஷ்ணுவின் பத்தாவது அவதாரம் ஆகும். நமக்காக இரங்கி வந்த உலகளந்த ஆண்டவர் இக்கலியுகத்தில் காெல்லம் வருடம் 1008-ம் ஆண்டு மாசி மாதம் 20ம் தேதி திருச்செந்தூர் கடலில் மகரமதில் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டமாய்த் தோன்றி பண்டார உருவெடுத்து தெட்சணத்தில் வந்திருந்து நம்மை காத்து இரட்சித்தார்.

கலை கூடம்

அன்னதர்மம் என்பது ஒரு அய்யாவழி சடங்கிற்கு பயன்படுத்தப்படும் ஒரு சொல், இது உணவுக்கு இடையில் உணவு இல்லாமல் பகிர்வதை உள்ளடக்கியது. இன்டர்-டைனிங் என்பது ஒருவரின் சொந்த சாதிக்குள் உணவருந்துவதையும், மற்றவர்களை ஒதுக்குவதையும் குறிக்கிறது. அன்னதர்மத்தின் நடைமுறை இடை-சாப்பாட்டுடன் இணைந்து தோன்றியிருக்கலாம்.

வைகுண்ட அவதாரம்

1008 – ல் கடலில் இருந்து உதித்த வைகுண்டர் ஒரு ஒப்பற்ற அவதாரம் என அகிலம் கூறுகிறது. முதலாவதாக கலி யுகத்துக்கு முந்திய ஐந்து யுகங்களிலும் குறோணியின் ஒவ்வொரு துண்டுகளும் ஒவ்வொரு உருவம் தாங்கி உலகுக்கு வருகிறது. அவற்றை அழிக்கும் பொருட்டு நாராயண மூர்த்தி உலகில் பிறந்து அவனை அழித்தார். ஆனால் தற்போதைய கலி யுகத்தில் குறோணியின் ஆறாவது துண்டான கலி, மாயையாக உலகிற்கு வந்து மக்களின் மனதில் குடிகொண்டுள்ளதால் அவனை முன்பு போல் அழிப்பது இயலாததாகும். மேலும் கலியன் கேட்ட கொடிய வரங்களில் அவன் மும்மூர்த்திகளின் வடைவத்தையும் வரமாகப் பெற்ற காரணத்தினால், நாராயணர் நேரடியாக உலகில் அவதரித்து அவனை அழிக்க முடியாது. இதனை அகிலம், ‘முன்னின்று கொல்ல மூவராலும் அரிது’ என்கிறது. ஆனால் முதலில் குறோணியை கொல்லத் தவம் இருக்கும் போது திருமால் சிவனிடம் கொடுத்த வாக்கு பிரகாரம் நாராயணர் தான் கலியனை அழிக்க கடமைபட்டிருக்கிறார். மேலும் கலியன் வரம் வாங்கி வரும் போது நாராயணருக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் காரணமாக, ஒரு பண்டாரத்தை கலியனை வைத்து அட்டி செய்ய வைப்பதன் மூலம், அவனை அழிக்க முடியும். இவ்வனைத்து நிலைகளையும் சரி செய்யும் வண்ணம் முதன் முதலாக, நிர்குணனாகிய, ஏகப்பரம்பொருளான இறைவன் நாராயணரை சூட்சுமமகக்கொண்டு மனித உடலிலே மூன்றின் தொகுதியாக, பண்டார வடிவத்தில் அவதரிக்கிறார்.
இறைவன் நேரடியாக பிறக்க முடியாத காரனத்தினால் அவதாரம் மூன்று நிலையில் நடக்கிறது.

எதிர்வரும் நிகழ்வுகள்